சனி, 11 டிசம்பர், 2010

சாதாரண புதுமடத்தான் குரல் ........

கேமரா செல் இருக்ற நம்மள்ட கேரியர் பத்தி தெரியல! 
நம்மள பெத்தவுங்கள  பாலுங்குழி ரோட்ல மினி பஸ் காரன் முதுகு ஓ(ஒ)டிக்கலாம் 
பஸ் ஸ்டான்ட்  போகவே  பைக் வேணும் நமக்கு!
நம்ம தம்பி தங்கச்சி ஸ்கூல்ல பல்லி உழுந்த தண்ணி குடிச்சால் என்ன 
வகை வகையா வீட்டுல கூல் ட்ரிங்க்ஸ் நம்ம குடிக்கலாம்!
நம்ம வீட்டு குமர கரை சேர்க்க கஷ்ட்டப்பட்டு ஒரு  இடம் வாங்கணும் 
எந்த பொறம்போக்கும்  ஊரணிய தரவைய மூடி வித்தா நமக்கு என்ன!
வித்தவனுக்கும் காசும்! வாங்குனவனுக்கும்  ஆப்பும்! இதுல நம்ம யாரு!
நம்ம வேற்றுமைல ஒற்றுமை காண்போம் ஆமாங்க 95% நம்ம சமுதாயம் இருக்றப்பவும்
பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு நம்ம ஆளு ஒருத்தர் கூட தலைவரா வைக்க மாட்டோம்
ஆனால் நமக்குள்ள TMMK, TNTJ, ஜமாத்துனு நம்ம ஒற்றுமை தலை சொரிய வைக்கும்!
சுனாமியே வராத நம்ம ஊருக்கு சுனாமி நிவாரண நிதி வர்றப்ப 
நம்ம ஊரோட வளர்ச்சி நிதி எவ்ளோ கொல்லையடிசால்  நமக்கு என்னங்க!
நம்ம வீடு மாசற்ற வீடா இருக்கும்போது நம்ம ஊரு தரவைல குப்பை இருந்தால் இருக்கட்டுமே!
வெளி  நாட்டுக்கு வர்றதுக்கு உதவி செய்ய நிறைய அண்ணங்கல்லாம் இருக்றப்ப 
நம்ம ஊரு ஸ்கூல்ல டீச்சருங்க இல்லாட்டி நமக்கென்ன கவலைங்க!
பாச உறவுகளுக்கு படிக்கிறத பத்தி சொல்லி குடுக்கலேன்னா என்ன
பைக் வாங்கி குடுத்து தம்பிகளுக்கு பாசத்த பொழியுரமே!
நம்ம ஊரோட ஆதி தொழில் மீன் பிடிக்கிறது அது நசிஞ்சுட்டு வருது
அதானால நமக்கென்ன நம்மதான் அநியாய விலை குடுத்து மீன் வாங்கி சாப்புட்ரமே!
மீனவர் நல வாரியத்துக்காக மத்திய அரசு எவ்ளோ நிதி ஒதுக்குனா நமக்கென்ன
அது யாரவது விவசாயம் பார்க்றவன் சாப்புட்டு போவான் நம்ம மீனவர்களிடம் எதுக்கு நம்ம சொல்லணும்!
பாஸ்போர்ட் புதிப்பிக்க தகவல் கேட்டுக்க மட்டுமே போன நமக்கு கலெக்டர் ஆபீஸ்ல 
தகவல் அறியும் உரிமை சட்டம்னு ஒன்னு இருக்காமே அது எதுக்குங்க!
நம்மளால சமுதாயத்துக்கு ஏதும் செய்ய முடியலைனாலும் PIWA மாறி யாரவது 
சமுதாய நலனக்கு ஏதாவது செய்யனும்னு நினைச்சால் அதை குறை சொல்லலாமே!
 
இப்படி ஒரே குறையா சொல்லிட்டே இருந்தால் பொழுது விடிஞ்சு அடைஞ்சு அது பாட்டுக்கு போயிட்டே இருக்கும் சகதரர்களே!
ஒரு இசுலாமிய சகோதரன் இன்னொரு சகோதரனின் மானத்தை காப்பதனும்னு நபி மொழி!
சமீப காலமா நம்ம சகோதரர்கள் அமைப்பு ரீதியா கேவலமா திட்டிக்குறதை பார்கறப்ப கலங்குதுங்க நம் விழி!
 மனிதர்களாகிய நாம யாரும் குறை செய்யாதவுங்க கிடையாது தெரிஞ்சதை நல்லதை செய்வோம் அதுல குறையிருந்தால் அனுபவம் வாய்ந்த நம்ம பெரியவுங்களிடம் ஆலோசனை கேட்டுப்போம்.... 
அமைப்பு, கட்சி பாகுபாடில்லாமல் ஆதரிப்போம்... நம்மோட உரிமைகளை அரசாங்கத்திடம் உரக்க கேட்டுப் பெறுவோம்..
நம்ம எடுக்குற முயற்ச்சி ஒரு தேவை உள்ளவனுக்கு சரியான நேரத்துல போய் சேர்ந்தால் அதுதாங்க நம்ம செய்றதுக்கு அர்த்தமே!
 நல்ல  முயற்சி வெற்றி அடைய என் பிரார்த்தனைகளும் என்னால் முடிஞ்ச பங்களிப்பும் எப்பவும் உண்டு...

ஏதாவது நம்மால செய்ய முடியலைனாலும் பரவாயில்ல நம்ம சமுதாயத்தினர் செய்றப்ப அவுங்களோடு கரம் கோர்த்து அதவரளிக்கும் 

சாதாரண புதுமடத்தான்........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக