திங்கள், 25 ஏப்ரல், 2011

IDB SCHOLARSHIP PROGRAM



The Islamic Development Bank, Jeddah (IDB), in pursuance of its policy of helping students belonging to Muslim Community around the world, is pleased to announce  Scholarships for students from the Muslim Community of India for study in a recognized University/College in their own country. The Scholarship is for the meritorious but financially weak and needystudents who intend to seek admission in the academic year 2011-12 in the First Year of the professional degree course in the field of Medicine i.e. MBBS, BDS, Pharmacy, Veterinary, Physiotherapy, Nursing including Bachelors Degree in Unani, Ayurvedic & Microbiology or Engineering (all Branches including Computer and Communications)Agriculture, Bio-Technology, Fisheries, Forestry, Food Technology, Business Administration and Law.

Applications for the scholarship should meet the following requirements:

Ø  Have secured minimum 60% marks in English, Physics, Chemistry and Biology/Mathematics in SSC (10+2) examination except for Maharashtra, Andhra Pradesh, Karnataka, Kerala and Tamilnadu who should have 70% in the aggregate in above four subjects.

Ø  Applicants for bachelor courses in BBA + MBA (integrated course) 4 years and LAW have scored minimum 60% marks in English and optional/elective subjects in SSC (10+2).

Ø  Age not over 24 years and not in receipt of any other scholarship.

Ø  Students or his/her parents are financially weak and unable to pay for his/her education. Students opting for payment seats need not apply.


Students benefiting from this scholarship must undertake to serve his/her community and country on completion of their studies for a period not less than the duration of the scholarship

Now the students can download the Application form directly from our websites mention below:


Last date for submission of Application form is:  5 August 2011

Please write for Application Forms available Free of Charge giving course details and the date of admission along with a self-addressed envelope of 25x11 cm size with postage stamps ofRs. 15/= affixed on it, to:

THE STUDENTS ISLAMIC TRUST
E-3, Abul Fazl Enclave,
Jamia Nagar, New Delhi – 110 025
Telephone: 011-26941028, 26957004

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.

1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம். 

I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு : 

1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...), சட்டம், ஆசிரியர் படிப்புகள்,  ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான  துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை,  தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.   இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும்.   குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள். 

2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது).   மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும்.  அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.

3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : 
மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது).  அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது

4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு :
 B.Com, CA (Charted accountant ), M.Com  படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில்  நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது. 

5. வரலாறு, பொருளாதாரவியல் : 
எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன

6. Vocational  குரூப் :  தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. 

II. பட்டய படிப்பு (டிப்ளோமா):

    இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள்  என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil  etc... போன்ற துறைகள் சிறந்த துறைகள்.  மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன.  டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம்.  பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள்  டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ).  12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.  

III. சான்றிதழ் படிப்பு (ITI):

   இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic  போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது. 


10 - ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு (
கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)

1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.) 
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc...
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.

மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு , ITI, டிப்ளோமா படிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்ளsithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்



S.சித்தீக்.M.Tech

சனி, 16 ஏப்ரல், 2011

தேர்வுகள் முடிந்துவிட்டது - விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்

10 -ஆம் வகுப்பு மற்றும் 12 - ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது.  மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுடன் தேர்வுக் முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்க பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். 

விடுமுறை நாள்களின் என்ன பண்ணலாம்?

1. ஆங்கில மொழிதிறனை (English language skill) வளர்த்துகொள்ள முயற்சிக்கவும் : ஆங்கில மொழிதிறன் என்பது இன்று இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்கள் ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம் அல்லது வீட்டில் இருந்தே ஆங்கில மொழி பயிற்சி புத்தகங்களை படிக்கலாம். ஆங்கில திறனை வளர்த்து கொள்ள மிக சிறந்த வழி ஆங்கில குர்ஆனை தமிழ் குர்ஆனுடன் ஒப்பிட்டு வாசிப்பது. குர்ஆனை, வசனத்திற்க்கு வசனம் ஆங்கிலத்திலும் தமிழிலும் படிப்பதின் மூலம் ஆங்கில அறிவும் வளரும், அல்லாஹ்வுடைய கட்டளைகளையும் அறிந்து கொள்ளமுடியும்.

2. தொடர்பு திறனை (Communication skill) வளர்ப்பது : வேலைவாய்ப்பு பெற மிக முக்கிய தகுதியாக கருதபடுவது தொடர்பு திறன் எனப்படும் Communication skill. என்னதான் மதிப்பெண் வாங்கி இருந்தாலும் Communication skill இல்லாவிட்டால் எந்த நிறுவனத்திலும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள். இந்த தொடர்பு திறன்  Communication skill -யை வளர்த்து கொள்ள மிக முக்கிய தேவை தைரியம், தைரியமாக நீங்கள் நினைக்கும் கருத்துக்களை பிறருக்கு சொல்ல பழகுங்கள். அதாவது இஸ்லாமிய ரீதியில் சொல்வதாக இருந்தால் நல்ல தாயிகளாக ( பிரசாரகர்களாக) மாற பழகுங்கள். Communication skill  என்பது  ஒவ்வொறு முஸ்லீமிடமும் கட்டாயம் இருக்கவேண்டிய பண்பாகும்.  
"நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்." (குர்ஆன் 3 : 104)

தினமும் குர் ஆனை எடுத்து தொழுகைக்கு பிறகு வீட்டில் உள்ளவர்காளுக்கு படித்துகாட்டுங்கள், முடிந்தவரை பிறருக்கு எடுத்து சொல்லுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பழகுங்கள்.  குர் ஆனுடைய கருத்துகளை பிறருக்கு சொல்வதற்க்கு வெட்க படாதீர்கள், தைரியமாக சொல்லுங்கள். இப்படி தொடர்சியாக செய்வதன் மூலம் நம்முடைய Communication skill - யை வளர்த்து கொள்ள முடியும்.

கணினி அறிவை (Computer knowledge ) வளர்த்து கொள்ளுங்கள் : தற்போது பள்ளிபடிப்பு படிக்கவே கணினி அறிவு  (Computer knowledge)அவசியமாகின்றது, எனவே கணினியில் குறிப்பாக MS Office (Word, Excel, Power Point etc..)கற்றுகொள்ளுங்கள். மேலும்  internet-ன் பயன்பாட்டையும் கற்றுகொள்ளுங்கள், குறிப்பாக  மின் அஞ்சல் (E -mail) துவங்குவது, google Search, விக்கீபீடியா போன்றவைகளை அறிந்துகொள்ளுங்கள், இன்டெர்னெட் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும், இணையதளத்தில் நல்ல வியஷயங்களுக்கு இணையாக கெட்ட விஷயங்களும் கொட்டிகிடக்கின்றது. தற்போதுள்ள காலத்தில் இன்டெர்னெட்டே வேண்டாம் என ஒரேடியாக ஒதுக்கிவிட முடியாது, எனவே பெற்றொர்கள்தான் மாணவர்களை இன்டெர்னெட்டை சரியான முறையில் பயன்படுத்த பழக்க படுத்த வேண்டும்

10 மற்றும் +2 - ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கு : விடுமுறையை வீணாகாமல் இப்போதே பொது தேர்விற்க்கு படிக்க ஆரம்பித்து விடுங்கள்.  9 - ஆம் வகுப்பு முடித்து 10 - ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் 10 - ஆம் வகுப்பு பொது தேர்விற்க்கும். +1 முடித்து +2 செல்லும் மாணவர்கள் +2  வகுப்பு பொது தேர்விற்க்கு தயாராகுங்கள்.  +2 ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்கள்  தேசிய அளவில் மருத்துவம் பொறியியல் படிக்க நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு  தயாராகுங்கள். 

 +2 - ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கான போட்டி தேர்வுகள் :

IIT-JEE - இந்த தேர்வு IIT, IISc - ல் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 - ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
AIEEE - NIT  மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 - ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
AIPMT -  மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS படிக்க நடத்தபடும் தேர்வு, உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் மற்றும் இயற்பியல் , வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
HSEE - IIT -யில் ஒருங்கினைத்த 5 ஆண்டு M.A. படிப்பிற்க்கான தேர்வு. அனைத்து பிரிவு மாணவர்களும் எழுதலாம், குறிப்பாக Arts குரூப் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வின் மூலம் IIT-யில் படிக்கலாம்

மாணவர்களே!  நேரத்தை வீணாகாமல் இப்போதே போட்டி தேர்வுகளுக்கும் , பொது தேர்வுகளுக்கும் தயாராகுங்கள்.  தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

அனைத்து போட்டி தேர்வுகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும். 

பிறந்த நாள் கொண்டாடலாமா?



பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.
 
இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.

மேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது. மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலே நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கின்றது?

மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கின்றது?

இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
 
3456حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

''உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள்.

புகாரி (3456)

நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் பிறந்த தினம் கொண்டாடியதுமில்லை அவ்வாறு கொண்டாடுமாறு ஏவியதுமில்லை. இந்த நடைமுறை மார்க்கத்தில் புதிதாக புகுந்த பித்அத் ஆகும்.

"செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்" என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி), நூல்: நஸயீ 1560)

சிலர் பிறந்த நாள் கொண்டாடுவது தவறு என்று தெரிந்தும் வாழ்த்துவது தவறில்லை என்று நினைக்கிறார்கள்.இந்த வாதம் அவர்களுடைய அறியமயையே காட்டுகிறது.ஒரு தவறை செய்பவருக்கும் அந்த தவறை ஆதரிப்பவர்களுக்கும் அதற்க்கு உண்டான தண்டனை வழங்கப்படும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.அதோடு அல்லாஹ் நின்று விடாமல் யாராவது தவறு செய்வதை கண்டால் அதை தடுக்க வேண்டும் என்றும் ஆணையிடுகிறான்.

صحيح مسلم حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح...  وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ - وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ - قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ.

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

(அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) , நூல்: முஸ்லிம் 70)

எனவே பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நீங்கள் பிறரை அழைத்தாலும் பிறரை அழைக்காமல் உங்கள் குடும்பத்தினர் மட்டும் கொண்டாடினாலும் அது தவறு. இதை நாம் கைவிட வேண்டும்

திங்கள், 11 ஏப்ரல், 2011

Who is Anna Hazare

Assalamu Alaikkum

1. Who is Anna Hazare? 
An ex-army man. Fought 1965 Indo-Pak War 

2. What's so special about him?
 
He built a village Ralegaon Siddhi in Ahamad Nagar district, Maharashtra 

3. So what? 
This village is a self-sustained model village. Energy is produced in the village itself from solar power, biofuel and wind mills.
 
In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest village in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village. 
  
4. Ok,...? 
This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for his social activities. 
  
5. Really, what is he fighting for? 
He is supporting a cause, the amendment of a law to curb corruption in India.


6. How that can be possible? 
He is advocating for a Bil, The Lok Pal Bill (The Citizen Ombudsman Bill), that will form an autonomous authority who will make politicians (ministers), beurocrats (IAS/IPS) accountable for their deeds. 

8. It's an entirely new thing right..?
 
In 1972, the bill was proposed by then Law minister Mr. Shanti Bhushan. Since then it has been neglected by the politicians and some are trying to change the bill to suit thier theft (corruption). 

7. Oh.. He is going on a hunger strike for that whole thing of passing a Bill ! How can that be possible in such a short span of time?
 
The first thing he is asking for is: the government should come forward and announce that the bill is going to be passed. 
Next, they make a joint committee to DRAFT the LOK PAL BILL. 50% goverment participation and 50% public participation. Because you cant trust the government entirely for making such a bill which does not suit them. 

8. Fine, What will happen when this bill is passed?
 
A LokPal will be appointed at the centre. He will have an autonomous charge, say like the Election Commission of India. In each and every state, Lokayukta will be appointed. The job is to bring all alleged party to trial in case of corruptions within 1 year. Within 2 years, the guilty will be punished. Not like, Bofors scam or Bhopal Gas Tragedy case, that has been going for last 25 years without any result. 

9. Is he alone? Whoelse is there in the fight with Anna Hazare?
 
Baba Ramdev, Ex. IPS Kiran Bedi, Social Activist Swami Agnivesh, RTI activist Arvind Kejriwal and many more. 
Prominent personalities like Aamir Khan is supporting his cause. 

10. Ok, got it. What can I do?
 
At least we can spread the message. How? 
Putting status message, links, video, changing profile pics. 
At least we can support Anna Hazare and the cause for uprooting corruption from India. 
At least we can hope that his Hunger Strike does not go in vain. 
At least we can pray for his good health. 
  
I am sending this out to all my contacts. My humble request to all is to do the same and spread the word.

-An Indian

சனி, 9 ஏப்ரல், 2011

PIWA Site

தகவல் பெறும் உரிமை சட்டம் 2005


பொது மக்கள் இச்சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை தெரிந்து கொள்ள வேன்டியது அவசியம்
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள தகவல் பெறும் உரிமையை நடைமுறைப்படுத்தவும். அரசின் வெளிப்படையான செயல்பாட்டை உறுதி செய்யவும். விரும்பும். மக்களுக்கு அரசின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளால் தகவல்களை வழங்க இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டு மே 11 அன்று இச்சட்ட மசோதா லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. 15,06,2005 அன்று நம் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார். பின்னர். 12,10,2005 அன்று இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டத்தின் முக்கிய பிரிவுகள்
o அனைத்து விதமான ஆவணங்களையும். பல்வேறு வடிவங்களில். ஒவ்வொரு பொது அரசு அதிகாரியும். பராமரிப்பதன் மூலம். அவை குறித்த தகவல்களை மக்களுக்கு சுலபமாக வழங்குவதை உறுதி செய்ய முடியும். (பிரிவு 4)
 o தனது துறை குறித்த செயல்பாடுகள். கடமைகள் போன்றவற்றை. இச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து (15,06,2005) 120 நாட்களுக்குள் அரசு அதிகாரி வெளியிட வேண்டும். o இச்சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்டுள்ள மத்திய தகவல் வழங்கும அதிகாரிகளோ அல்லது மாநில தகவல் வழங்கும் அதிகாரிகளோ. தகவல் கேட்கும் மக்களுக்கு தகவல் வழங்க வேண்டும். (பிரிவு 5)
o டைப் செய்யப்பட்டோ அல்லது எலக்ட்ரானிக் தொழில் நுட்பம் மூலமோ தகவல் வழங்கப்படும். (பிரிவு 5)
o இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் அல்லது மேல் முறையீடு மனுக்கள் மீதான தகவல்களைப் பெற ஒவ்வொரு அரசுத் துறை அதிகாரியும். ஒரு அதிகாரியை மத்திய துணை தகவல் வழங்கும் அதிகாரியாகவோ அல்லது ஒரு மாநில துணை தகவல் வழங்கும் அதிகாரியாகவோ நியமனம் செய்ய வேண்டும். (பிரிவு 5)
o தகவல்களைப் பெற விரும்பும் நபர். அதற்குரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். (பிரிவு 6)
o தகவல்களைப் பெற விரும்பும் நபர். அதற்கான காரணத்தையோ அல்லது தன்னை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியைத் தவிர. தன் தனிப்பட்ட காரணங்களையோ கூறத் தேவையில்லை, (பிரிவு 6)
o தகவல் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படவேண்டும். (பிரிவு 6)
o ஒருவரின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் குறித்த தகவல் கேட்கப்பட்டால். விண்ணப்பம் பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் தகவல் வழங்கப்படவேண்டும். (பிரிவு 6)
o கேட்கப்பட்ட தகவல் மீது எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லையென்றால். கோரிக்கை மறுக்கப்பட்டது என பொருள் கொள்ளப்படும். (பிரிவு 6)
o கோரிக்கை நிராகரிக்கப்பட்டால். அதற்கான காரணங்களும். மேல் முறையீடு செய்வதற்கான காரணங்களும் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். (பிரிவு 7 (8))
o இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் தகவல். நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல். வியாபார ரகசியம். விசாரணையை பாதிக்கும் தகவல் போன்றவற்றிற்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. (பிரிவு)
o எந்த ஒரு நபரிடமிருந்தும் பெறப்படும் புகாரை விசாரிக்க. மத்திய அரசும். மாநில அரசும் முறையே மத்திய தகவல் ஆணையம் மற்றும் மாநில தகவல் ஆணையத்தை அமைத்து. அறிவிக்கை வெளியிடவேண்டும்,. (பிரிவு 15)
o அளிக்கப்பட்ட கோரிக்கை மீதான முடிவை கால கெடுவிற்குள் (30 நாட்கள்) வழங்காவிட்டால். 30 நாட்களுக்குள் மூத்த தகவல் வழங்கும் அதிகாரிக்கு மேல் முறையீடு செய்யலாம். (பிரிவு 19)
o தகவல் வழங்கப்படவில்லையென்றால். நாள் ஒன்றுக்கு ரூ,250 வீதம். ஒவ்வொரு நாளைக்கும் அபராதமும். அதிகபட்சமாக ரூ,25.000 வரை அபராதம் விதிக்கப்படும். (பிரிவு 20)
o இச்சட்டத்தால் வழங்கப்பட்ட உத்திரவுக்கெதிராக எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்ய முடியாது. (பிரிவு 23)